இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே M.V.பட்டிணம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் M.V.பட்டிணம் கடற்கரை பகுதிக்கு சென்று சோதனையிட்ட போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 39 சாக்குகளில் சுமார் 500 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்ததுடன் அதனை பதுக்கி வைத்திருந்த சோளியக்குடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளிமுத்து (60). என்பவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி