திருநெல்வேலி : கோவில்பட்டி, கடம்பூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை, பொது மக்கள் மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை, பெற்று பாலீஷ் செய்து கேரளாவுக்கு விற்கும் குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் கோவில்பட்டி ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் ,கோடவுன்கள் அமைத்து கடத்துகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, மகாராஜன், மாணிக்கம், தரப்பினரிடையே விரோதம் இருந்தது. ஒருவர் கடத்துவது குறித்து மற்றொருவர்காவல் துறையினரிடம், புகார் அளித்தபடி இருந்தனர்.
கடம்பூர் ஊரணி தெருவை, சேர்ந்த துரைப்பாண்டி, மாணிக்கம் தரப்பிற்கு ஆதரவாக, செயல் பட்டார். இவர் மகாராஜன் குறித்து, மே 2 தூத்துக்குடி கலெக்டர், அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆத்திரமுற்ற மகாராஜன் தரப்பினர், கயத்தாறு அருகே நேற்று முன்தினம் இரவு மது அருந்திய துரைப்பாண்டி, மற்றும் ஆதரவாளர்களை, பயங்கரமாக தாக்கினர். இதில் துரைப்பாண்டி இறந்தார். இதில் ஈடுபட்ட மகாராஜன், ஜானகிராம், மனோரஞ்சித்குமார், சின்னத்துரை, ராஜாராமை, கயத்தார், காவல் துறையினர், கைது செய்தனர்.