சிவகங்கை: ஊரடங்கு: நள்ளிரவிலும் கடமை தவறாத பெண் காவலர்கள்!மற்றவர்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் விழித்து இருந்து பணி செய்கின்றோம் என்கின்றனர்
பெண் காவலர்கள்சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் பணியாற்றும் சரண்யா, பாண்டி செல்வி என்ற இரு பெண் காவலர்கள் ஊராடங்கு நேரமான நள்ளிரவில் கடமை தவறாமல் பணியாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருந்து கொண்டு இருகின்றது. இதற்கு இடையில் பொது மக்களை காக்க வேண்டும் என சுறு சுறுப்புடன் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகின்றனர் காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள்.
இந்நிலையில் மானாமதுரை தேவர் சிலை பகுதியில் நள்ளிரவில் வெறிச்சோடிய அந்த பகுதியில் இரு பெண் காவலர்கள் மட்டும் ஆளுக்கு ஒவ்வொரு பக்கமும் நடந்து கொண்டே இருந்தனர்.சும்மா சேரில் உட்கர்ந்து கொண்டு அல்லது அதிலே துங்கி கொண்டு
கடமைக்கு பணியற்றமாால் கடமையே முக்கியம் என்று இரு பெண் போலீசாரும் வேலை பார்ப்பது பெருமையான விஷயமே…!
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி