மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவரது மனைவி பாண்டீஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகின்றன. யுவஸ்ரீ (14). திவ்யஸ்ரீ ஆகிய மகள்களும்(12). வல்லவன் (13) .என்ற மகனும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அதன் பின் சமாதானம் ஏற்பட்டு கடந்த ஆறு மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்தையா கடப்பாரையால் பாண்டீஸ்வரியின் தலையில் அடித்தார். இதில் பாண்டீஸ்வரி சம்பவ இடத்தில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டிபோலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை கொலை செய்த முத்தையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி