திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ருக்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (எ) பழனிச்சாமி இவர் கீரனூர் பகுதியில் குத்தகைக்கு தோட்டத்தை பிடித்து விவசாயம் செய்து வந்த நிலையில் தோட்டத்தின் அருகில் இருந்த பால் முகவர்களான கௌதம் மற்றும் பிரகாஷ் என்பவர்களிடம் கடனாக ரூபாய் 1 லட்சம் பெற்று மாடுகளை வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். மேற்படி விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பித் தர இயலாத நிலையில் கௌதம் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் கடனாக கொடுத்த பணத்திற்கு பதிலாக பழனிச்சாமியிடம் இருந்த மாடுகளை (04.11.2023) பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த பழனிச்சாமி கள்ளிமந்தம் அருகே அருவங்காட்டு வலசு பேருந்து நிறுத்தம் அருகே விஷம் அருந்தி அதை மொபைல் போனில் பதிவு செய்து விட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். பின்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு (05.11.2023) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில் பழனிச்சாமி விஷம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாலும், பழனிச்சாமி அவரின் தந்தையார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா