விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுதாகர், 39; அதே பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சத்யநாராயணன், 38; நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், பூமிஸ்வரன் கோவில் அருகே மது குடித்தனர்.
அப்போது சுதாகரிடம், சத்யநாராயணன் கடனாக பணம் கேட்டுள்ளார். சுதாகர், பணம் இல்லை என கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த சத்யநாராயணன் தகராறு செய்தார். இதனால், இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது சத்யநாராயணன், வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
கொலை செய்யப்பட்ட சுதாகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து சத்யநாராயணனை கைது செய்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்