திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்திகேயன், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வேனை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பியோடியவர், வடமதுரையை சேர்ந்த கெங்கமநாயுடு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா