திருப்பூர் : மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன்,உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் 765 திரு.சரவணகுமார், இரண்டாம் நிலைக்காவலர் 224 திரு.சத்தியேந்திரன் என்பவர்கள் மத்தியபிரதேச காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உதவி கேட்டதன் பேரில், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமா நகர் சரண் தியேட்டர் அருகில் தங்கியிருந்த, அந்த வழக்கின் சிறுமியை மீட்டும் வழக்கின் எதிரியை கைது செய்தும் மத்திய பிரதேசம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர் வசம் ஒப்படைத்தனர். இச்செயலை செய்த ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாநகர காவல் ஆணையர் உயர்திருககார்த்திகேயன் இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்