திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கக்கன் நகர் பாலம் அருகே (21.02.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், சாதிக்ஈஷாக் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையின் போது அவ்வழியே கார் மற்றும் லோடு ஆட்டோவில் வந்த தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டியை சேர்ந்த கணேஷ் முத்துகுமார்(37). ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள்(27). ரமேஷ்(29). அலெக்ஸ்சற்குணம்(27). கடையநல்லூரை சேர்ந்த சக்திவேல்(28), பாளை, திம்மராஜபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்(26). ஆகியோரை சோதனை செய்ததில் சுமார் 16 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்ததையடுத்து சம்மந்தபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கார் லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்