திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோடாரங்குளம் அருகே வி.கே.புரம் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கோடாரங்குளம், ஏகாம்பரம் தெருவை சேர்ந்த மாயகண்ணன் (24).கோயில்குளம், நடுத் தெருவை சேர்ந்த வடிவேல் மணிகண்டன் (28). மன்னார்கோவில், போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (22). அம்பாசமுத்திரம், புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமணி (26). மற்றும் ஒரு இளஞ்சிறார் உட்பட ஐந்து பேர் வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 56 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து 56 கிராம் கஞ்சாவையும் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஒரு இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்