திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி பேருந்து நிலையம் அருகே குளத்து ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த நாகமாணிக்கம்(48). கலையம்புத்தூரை சேர்ந்த மகேஷ்குமார்(40). ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா