திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கழுகுமலை ரோட்டில் மூவிருந்தாளி விலக்கு அருகே உதவி ஆய்வாளர், கணேசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மூவிருந்தாளி, தெற்கு தெருவை சேர்ந்த பால்முத்தையா (46). மற்றும் சுப்பையாபுரம், தெற்கு தெருவை சேர்ந்த மைதிலியன் (22). ஆகிய இருவரும் சேர்ந்து வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 1.950 கிலோ கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பால்முத்தையா, மைதிலியன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 1.950 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்