திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம்.கே.பி. நகர் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கன்னியப்பன் (23). சமாதானபுரத்தைச் சேர்ந்த முனீஸ்கர் (24). ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவர்கள் சுமார் 50 கிராம் அளவிலான கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல திருநெல்வேலி நகரம் ஆர்ச் பகுதியில் மாதா தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் கணேசமூர்த்தியை (37). கைது செய்து, அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















