கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியான கக்கணூர் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 14 கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா, செல்போன், வாகனத்துடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்