திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், கணேஷ் சரவணன் பாபு தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கருவநல்லூர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த அருண்குமாரை (34). சோதனை செய்த போது அவர் 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து சீதபற்பநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், சையத் நிசார் அகமது வழக்கு பதிவு செய்து அருண்குமாரை (10.02.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்