திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் (30.04.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வெள்ளான்குளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (27). என்ற நபரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முருகனை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர், நிசார் அஹமத், அவரிடமிருந்து 1 கிலோ 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்