இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் காவல்நிலையம் ஜீவாநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த சேதுபதி மற்றும் சிவக்குமார் ஆகிய 2 நபர்களை சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.