திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பரமேஸ்வரபுரம், தெற்கு தெருவை சேர்ந்த மகாராஜாவை (24). சோதனை செய்த போது 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர், சகாய ராபின் ஷாலு வழக்கு பதிவு செய்து மகாராஜாவை (04.02.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்