திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திம்மராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த சரண் விஷ்ணு (19). வி.எம்.சத்திரத்தை சேர்ந்த அரவிந்த்(23). பெருமாள்புரத்தை சேர்ந்த தனமணி (19). என்பதும் , விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவா்களிடமிருந்து சுமார் 2.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















