திருநெல்வேலி: தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் எதிரிகளான கூவாச்சிபட்டியை சேர்ந்த மருதுபாண்டியன் (21), சுரண்டையை சேர்ந்த சபரிசெல்வம்(23) ஆகிய இருவரையும், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழிப்பறி கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்த சிங்கிகுளத்தை சேர்ந்த வானுமாமலை என்ற குறளி வானுமாமலை (35), என்பவரையும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான திசையன்விளையை சேர்ந்த செல்வராணி (56) மற்றும் தென்காசி, ஆம்பூரை சேர்ந்த ராமலட்சுமி(50) உட்பட 5 நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.