சென்னை : தேனாம்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.M.சக்திவேல், (மு.நி.கா.57913), ஆயுதப்படைக்காவலர் திரு.P.சௌந்தரராஜன், ஆகிய இருவரும் கடந்த (26.04.2022) அன்று தேனாம்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக, கஞ்சா எடுத்து வந்த ஹரி (33), கொடுங்கையூர், முகமது உசேன் அலி (20), மண்ணடி ஜெயந்தர்ராஜ் (19), மண்ணடி ஆகிய மூவரை, கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 10.7 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ.3,300/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் (07.05.2022), அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.