திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பேட்டை, கட்டளைபுரத்தை சேர்ந்த தங்கராஜ் (23). என்பவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர், சையது நிசார் அகமது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தங்கராஜை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்