திருநெல்வேலி : திருநெல்வேலி இராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுமணி (28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் மீது பல வழக்குகள் உள்ளதால்
தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப.,விக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், பொன்னுமணி குண்டர் சட்டத்தின் கீழ் (21.02.2025) அன்று பாளை மத்திய சிறையில்* அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்