திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த பேட்டை, சத்யா நகரை சேர்ந்த கனகராஜ் (25). என்பவரை சோதனை செய்து பார்த்த போது கஞ்சா விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர், மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கனகராஜை கைது செய்து
அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.