திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சின்ன சங்கரன்கோவில் செல்லும் ரோட்டின் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த கோடாரங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த சண்முக சுந்தரம் (29). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சண்முக சுந்தரத்தை (25.02.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்