திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி உதவி ஆய்வாளர், சுதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ஆச்சிமடம் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாபுரம், சக்தி நகரை சேர்ந்த சதீஷ் (23). மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த துரைபாண்டி (22). இருவரையும் சோதனை செய்ததில் அவர்கள் 1 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவந்திபட்டி காவல் ஆய்வாளர், ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் துரைபாண்டியை (20.03.2025) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்