சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த முரளி 40 .என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திரு.சி.திருமகள் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முரளி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.