திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் (22.01.2026) அன்று காவல் உதவி ஆய்வாளர் கோமதி சங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த வீரமாணிக்கபுரம், குறிச்சி பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் கணேஷ்குமார்(20). மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பாபநாசம் மகன் ரமேஷ்(44). ஆகியோரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















