திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம், செந்துறை ரோடு செட்டியார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த கண்ணன் மகன் செல்வபிரகாஷ்(23). சாகுல்சையதுமீரான் மகன் அஜித்மீரான்(28).மோகன் மகன் பிரவீன்குமார்(24). அக்பர் மகன் ஆஷிக் (எ) வெள்ளை(25). சின்னு மகன் விஷ்ணு(23). உயிர் முகமது மகன் முகமதுமஸ்தான்(24). மாரிமுத்து மகன் பிரகாஷ்ராஜ்(21). தேனியை சேர்ந்த ராஜு மகன் ஆகாஷ்(23). மற்றும் (17). வயது சிறுவன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா