திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டி (25). இவர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், அவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., உத்தரவிட்டார். அதன் பேரில் நாகூர்பாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் (26.03.26) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















