திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் பழவூர் காவல் உதவி ஆய்வாளர், அனிஷ் மற்றும் காவலர்கள் அம்பலவாணபுரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தே கத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த செல்வம்(21). நவீன்குமார்(19). வினோத்குமார்(19). ஆகிய மூவரையும் பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவா்களிடமிருந்த 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்