திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மேற்பார்வையில் பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன்.சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் பழனி காமராஜர் வீதி பாலமுருகன் மகன் கார்த்திக் ராஜா (25). மார்க்கண்டேயன் கோவில் தெரு ராஜேந்திரன் மகன் சிவகுமார் (23). சத்யா நகர் சுருளி ஆண்டவர் மகன் மாரிச்சாமி (21). தட்டாங்குளம் முத்துச்சாமி மகன் அருண்குமார்37 கவுண்டமங்கலம் ஜோசப் மகன் ஜேம்ஸ்(27). குபேரபட்டினம் முருகன் மகன் நாகேந்திரன் (27). ஆகிய நபர்கள் என தெரிய வந்தது.அதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா