திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், உதவி ஆய்வாளர் வேத மாணிக்கம் சேம்ஜி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏர்வாடி அரசு பள்ளி அருகே LNS புரத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் (23). சேக் மன்சூர் (21).முகமது இர்பான் (24). ஆகிய மூவரை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய 30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து ஏர்வாடி காவல் ஆய்வாளர் சுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்துல் ரஹீம், சேக் மன்சூர், முகமது இர்பான் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 30 கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்