திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பழனி DSP. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாலாஜி கருத்தரித்தல் மையம் அருகே மற்றும் திண்டுக்கல் ரோடு ஐஸ்வர்யா மருத்துவமனை அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த சைத்தான்பாலா (எ) பாலசரவணன்(23). மகேஸ்வரன்(23). கருக்கா(எ)நாகராஜ்(22). கார்த்திக்(22). ருத்ரபூபதி(21). பிரதீப்(29). லல்லி (எ) கௌதம்(23). முத்துப்பாண்டி(20). நாகராஜ்(23).சரவணன்(24). ஆகிய 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















