திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது முதலாளிகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த திசையன்விளை, சிவராஜ் தெருவை சேர்ந்த சிவபாலன் (20). சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (21). ஆகிய இருவரையும் சோதனை செய்த போது கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர், கணபதி வழக்கு பதிவு செய்து சிவபாலன், மணிகண்டன் ஆகிய இருவரையும் (31.03.2025) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்