குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரணியல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் சானல் கரை பகுதியில் காவலர் சகிதம் ரோந்து சென்ற போது,
சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கூவரவிளை பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் 19. மற்றும் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஆண்டோ ஜிபின் 19. என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்பு அவர்கள் வைத்திருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.