திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் S.P.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கோகிலா, ஷேக்பரீத், டேவிட் பாக்கியராஜ், முருகேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 1/2 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள், 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா