திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி துர்கா தேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி தனிப்படையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தட்டார்பட்டி பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வேடசந்தூரை சேர்ந்த சசிகுமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் (எ) மாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 1/2 கிலோ கஞ்சா, செல்போன், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா