தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள் தலைமையில் போலீசார் மொரப்பூர் , அபியம்பட்டி, சிந்தல்பாடி பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிந்தல்பாடி ரயில்வே மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த சந்தேகம் படும்படியாக நின்றிருந்த வேடியூரை சேர்ந்த சிவன் 45, கடத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாத் 21. ஆகிய இரண்டு நபர்களை போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.