தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . ரவளிபிரியா காந்தபுநேநி அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . அசோகன் அவர்களின் மேற்பார்வையில் , உதவி ஆய்வாளர் திரு. கீர்த்திவாசன் தலைமையில் SSI திரு. ராஜா,
SSI செல்வகுமார், HC ரமேஷ், HC ஜம்புலிங்கம், HC சண்முகசுந்தரம், HC கதீஷ், HC சுரேஷ், ஆகியோர் கொண்டதனிப்படை போலீசாருக்கு இன்று (13-8-2021 ) காலை கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் உள்ளிகான் தெருவை சேர்ந்த தமிமுன் அன்சாரி, மற்றும் மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்த மனோபாலா ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 52 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அதி வேகம் செல்லக்கூடிய உயர் ரக இரு சக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தார்கள்
அதன் பின்னர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கஞ்சா பொட்டலம் வைத்திருந்தவர்களிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.