நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகோதரர்களான பாபு, மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.