திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் பகுதியில் கவரப்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் கையில் இருந்த கருப்பு நிற பொட்டலத்தை தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவரின் இரு சக்கர வாகனத்தை படம் பிடித்த காவல் துறையினர் அந்த வாகனத்தின் பதிவண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் தச்சூர் பகுதியை சென்ற கார்த்திக்(31). என்பது தெரிய வந்தது.

அங்கிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரை கவரைப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் நத்தம் மற்றும் கீழ்மேனி ஊராட்சிகளின் கிராம உதவியாளராக பணியாற்றி வந்ததும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கவரப்பேட்டை பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா வழக்கு பதிவு செய்த கவரப்பேட்டை காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான கிராம உதவியாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு