இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாரிச்செல்வம், மணிகண்டன் @ ஜப்பான் மற்றும் ஓம்சக்தி தாசன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
















