திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதியில் (10.10.2025) அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் வினித்(27). என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வினித்தை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்