திருநெல்வேலி : திருநெல்வேலி களக்காடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, களக்காடு பெருமாள் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சிங்கிகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (26). என்பவரை சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஏர்வாடி காவல் ஆய்வாளர், செல்வி ( பொறுப்பு ) வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்