திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மேல தாழையூத்து, சுண்ணாம்பு காலவாசல் தெருவை சேர்ந்த இசக்கி துரை @ கட்டத்துரை(23). சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதேஷ் கண்ணன் (20). மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரையும் சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இசக்கி துரை @ கட்டத்துரையையும், மாதேஷ் கண்ணனையும் இன்று கைது செய்து, இவர்களுடன் இருந்த சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்