திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, (தற்போது கூடங்குளம் பகுதியில் வசித்து வரும்) ஆதர்ஸ் குமார் (24). என்பவரை சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதர்ஸ் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















