திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பிரிய ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உடன்குடி ரோட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த மாரிமுத்து (22). தங்கதுரை (22). தருண்குமார் (19). பாலமுருகன் (19). ஆகியோரை சோதனை செய்த 200 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர் அவர்கள் 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். இது குறித்து திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நான்கு பேரையும்கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்