கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட், கெலமங்கலம் இரண்டு காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கிடைத்த தகவலின் பேரில் அனுமேப்பள்ளி ரோடு எழில் நகர் மசூதி அருகில், பைரமங்கலம் நான்கு ரோடு அருகில் ஆகிய இரண்டு இடங்களில் அவ்வழியாக வந்த மூன்று நபர்களை நிறுத்தி சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது, கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ 500 கிராம் கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்