திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோவில்குளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கௌதமபுரி, தெற்கு தெருவை சேர்ந்த மயிலரசன் (31). என்பவரை சோதனை செய்த போது 85 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து மயிலரசனை இன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்